நியூசிலாந்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Default Image

நியூசிலாந்து நாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு.

நியூசிலாந்து நாட்டில் கடந்த 100 நாட்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலைதிரும்பிய நிலையில், 102 நாட்களுக்கு பின், அங்கு புதிதாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இவர்களுக்கு கொரோனா எப்படி பரவியது என்பது குறித்து கண்டறியப்படவில்லை. இதன்காரணமாக, அங்கு கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நியூசிலாந்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருபவரின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்