புதிய அறிகுறிகளுடன் தாக்கும் கொரோனா!
இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவயதுபருவத்தினருக்கு, கால் பாதங்களில் அரிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதன் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், இதனை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மிக தீவிரமாக இறங்கி உள்ளது.
இந்நிலையில், இந்த கொரோனா வாஇரசால் இதுவரை உலக அளவில், 4,012,857 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 276,216 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவயதுபருவத்தினருக்கு, கால் பாதங்களில் அரிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பாதத்தின் அடிப்பபுறத்திலும், பக்க வாட்டிலும் தோலின் நிறம் பழுப்பாக மாறுவதுடன் அரிப்பு ஏற்படுவதும், கொரோனா பாதித்த சிலருக்கு கை மற்றும் விரல்களிலும் இதுபோன்ற அரிப்பு ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய அறிகுறிக்கு “கோவிட் பாதம்” என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.