#corona:லண்டனில் பிறந்த குழந்தையை தாக்கிய கொடூரன் கொரோனா.!
இங்கிலாந்தில் புதிதாகப் பிறந்த ஒரு குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது . இதுவரைக்கும் கொரோனா தாக்கியவர்களில் மிக குறைந்த வயது என்றால் அது இந்த குழந்தை தான்.
குழந்தை பிறப்பதற்கு முன்னதாக இந்த குழந்தையின் தாய்க்கு சில நாட்கள் முன்னர் மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது .இதனால் அவரை லண்டனில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் .அப்பொழுதே அவருக்கு கொரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது ,ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை .
இது அவர்களுக்கு தெரியவில்லை குழந்தை பிறப்பதற்கு முன்னதாக கொரோனோ தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த பின்னரே கொரோனோ தொற்று இருப்பது குறித்து முடிவு தெரியவந்துள்ளது.குழந்தை பிறந்த சில மணிநேரத்தில் அந்த குழந்தைக்கும் கொரோனோ தொற்று இருக்கிறதா..? என்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . பின்னர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது .
கொரோனோ தொற்று குழந்தை கருவில் இருக்கும் பொழுது ஏற்பட்டதா..? அல்லது பிறக்கும்போது தொற்றிக்கொண்டதா…? என்பது குறித்து தெரியவில்லை .இந்நிலையில் தாய் மற்றும் குழந்தைக்கும் லண்டனில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
உலக சுகாதார அமைப்பு கொரோனாவை சில நாட்களுக்கு முன்னர் உலக தொற்று நோயாக அறிவித்தது .இதுவரைக்கும் உலகம் முழுவதும் 1,40,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,000-க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சீனாவில் மட்டும் 3000 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் 85 பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர் .இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு தேசிய பேரிரடராக அறிவித்துள்ளது .