இங்கிலாந்தில் முதன்முறையாக விலங்குகளை தாக்கிய கொரோனா! ஆறே நாளில் கொரோனாவை வென்ற பூனை!
ஆறு நாட்களில் கொரோனாவை வென்ற பூனை.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், உயிரிழப்போரின் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தில் பூனை ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இந்த பூனை ஆறே நாட்களில் கொரோனாவில் இருந்து பூரண குணடைந்துள்ளது. இதுகுறித்து, அந்நாட்டு சுற்றுசூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூனையின் உரிமையாளர்களிடம் இருந்து மட்டுமே, அதற்கு கொரோனா பரவியதாகவும், மற்ற விலங்குகளிடம் இருந்து, நோய் தொற்று பரவியதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், விலங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இது முதல்முறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் பூனைகளை எளிதாக தாக்க கூடியது என்றும், மற்ற பூனைகளுக்கு அதை பரப்பக் கூடியது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.