சார்ஸ் வைரஸை விட கொடூரமாக தாக்கும் கொரோனா ! பலி எண்ணிக்கை 722 ஆக உயர்ந்தது
கொரோனா வைரஸால் நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்துள்ளனர் .இந்த உயிர் பலி 2003 ஆண்டு தாக்கிய சார்ஸ் வைரஸை விட மிஞ்சக்கூடிய எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது .
சீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 722 ஆக உயர்ந்ததுள்ளது ,நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,646 எட்டியுள்ளது . புதியதாக 3,399 கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளனர்.
இந்த உயிரிழப்பு கடந்த 2003 ஆண்டு தாக்கிய சார்ஸ் வைரஸ் பாதிப்பை மிஞ்சும் அளவுக்கு உயிர் பலி அதிகரித்துள்ளது .சார்ஸ் வைரஸால் 2002-2003 சார்ஸ் வைரஸால் சீனா மற்றும் ஹாங்காங் கில் கிட்டத்தட்ட 650 பேரும் ,உலகமுழுவதும் 120 பேர் உயிரழிந்தனர் .
சீன அரசு ஹூபே ஹூபேயிலும் அதன் மாகாண தலைநகரான வுஹானிலும் வசிக்கும் மக்கள்களிடம் இருந்து நோய் தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் மற்ற நகரங்களில் உள்ள மக்கள்களை வீடுகளில் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது .வீடுகளில் இருந்து வெளிவரும் நபர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் குறித்து தொடக்கத்திலேயே எச்சரித்த சீன மருத்துவர் லீ வெண்லியாங் வையும் இந்த வைரஸ் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவந்த நிலையில் அவரும் பாதிக்கப்பட்டு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் சீனாவில் உயிற்பலி அதிகரித்து வருவதால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளது .உலக முழுவதும் 25 க்கு மேற்பட்ட நாடுகளை கொரோனா தாக்கியுள்ளது .