குணமடைந்து 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா.! – அதிர்ச்சியில் சீனா.!

சீனாவில் கொரோனா வரைஸில் இருந்து குணமடைந்தவர்களுக்கு 60, 70 நாட்களுக்கு பிறகு பரிசோதனை செய்ததில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தது.
சீனாவில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த நபர்களுக்கு பல நாட்கள் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா இல்லை என்று வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்களுக்கு 60, 70 நாட்களுக்கு பிறகு பரிசோதனை செய்ததில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தது. இந்த பரிசோதனையில் பலருக்கு எந்த ஒரு அறிகுறி இல்லாமல் கொரோனா இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனால் மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் குழப்பத்தில் இருக்கின்றன.
கொரோனாவில் இருந்து குணமடைந்து 70 நாட்கள் கழித்து மீண்டும் கொரோனா கண்டறிந்ததை குறித்து துல்லியமான விவரங்களை சீனா வெளியிடவில்லை, ஆனால் இதுபோல் 12 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அந்நாட்டு ஊடங்க நிறுவனங்கள் தகவல் கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வது உலக முழுவதும் வலியுறுத்தி வரும் நிலையில், குணமடைந்த நபர்களுக்கு மீண்டும் தொற்று கண்டறியப்படுவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களுக்கு உடற்பகுதியில் வைரஸ் தங்கியிருக்கக்கூடும் என்பதால் மீண்டும் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் இதனால் பெரிய அளவு ஆபத்து ஏற்படாது எனவும் தென்கொரிய வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!
April 11, 2025