உலக அளவில் 3.80 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு!
உலக அளவில் 3.80 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால், உலக அளவில் இதுவரை, 38,042,910 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,085,375 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 28,603,169 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.