இங்கிலாந்தில் 29,520 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

இங்கிலாந்தில் மேலும் 29,520 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பெருமளவு பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை கடந்த ஜூலை 19 ஆம் தேதி அறிவித்தனர். இந்த தளர்வு நாட்டில் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து நாட்டில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 29,520 பேருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணத்தால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டி உயர்ந்து வருகிறது. மேலும், கொரோனாவால் ஒரே நாளில் 93 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,30,894 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இங்கிலாந்தில் 13.13 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.