25 மில்லியன் ஈரானியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிபர் ஹசன் ரவ்கானி தெரிவித்தார்.
ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரவ்கானி தொலைக்காட்சியில் உரையாற்றும் போது, 25 மில்லியன் ஈரானியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 30 முதல் 35 மில்லியன் வரை ஈரானியர்கள் ஆபத்தில் இருக்கும் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.
சுமார் 14,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 200,000 -க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ரவ்கானி உரையில் கூறினார். ஆனால், சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,69,440 உள்ளது.
இந்நிலையில், சுகாதார அமைச்சகத்தை விட பல மடங்கு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஈரான், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கு நாடாக தற்போது இருந்து வருகிறது என்பது குறிப்பித்தக்கது.
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…