ரஷ்யாவில் 18,780 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,780 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 796 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் ஆதிக்கம் காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம், தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவிக்கொண்டிருக்கிறது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 18,780 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 796 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.
தற்பொழுது ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69,93,954 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,737 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், அதிகபட்சமாக மாஸ்கோவில் 1,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025