சமையல் எரிவாயு விலை குறைவதற்கு வாய்ப்பே இல்லை – ப.சிதம்பரம்

Default Image

மத்திய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பொதுத்துறைக்கு மூடு விழா வரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் மத்திய அரசு தனியார் மயமாக்குகின்றன. மத்திய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பொதுத்துறைக்கு மூடு விழா வரும் என்றும், சமையல் எரிவாயு விலை குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா உச்ச கட்டத்தில் இருந்த காலங்களில் ஆக்சிஜன் பற்றாக் குறையே இல்லை என்றும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று மோடி அரசு தவறான தகவல் தெரிவித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவர் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு எல்லா வகையிலும் மகிழ்ச்சி தரக்கூடிய ஆட்சியைத் தந்து கொண்டிருக்கிறார். தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த வரவேற்பு உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும், உள்ளாட்சி தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்க்கு வரவேற்பு தெரிவித்த அவர்,சட்டப்பேரவையில், இருந்து பாஜக மட்டும் தான் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தது, அதிமுக வெளிநடப்பு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்