சிவகார்த்திகேயனின் டான் படத்தில் குக் வித் கோமாளி பிரபலமான ஷிவாங்கி,ஆர்ஜே விஜய் ஆகியோர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான் . இதில் டாக்டர் திரைப்படம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். அயலான் திரைப்படம் வருகின்ற கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘டான்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.அந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பு கிடைத்தது.
கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகர் சூரி, நடிகர் சமுத்திரக்கனி, ஆகியோர் நடிக்கவுள்ளனர்.நாளை பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது டான் படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதாவது டான் படத்தில் முதலாவதாக மூன்று காமெடி நடிகர்களான முனீஷ்காந்த்,காளி வெங்கட் மற்றும் பாலா ஆகியோர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவாங்கி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது அவரது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் சிவகார்த்திகேயன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சென்ற போது ஷிவாங்கியை போல தங்கச்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .ஷிவாங்கியை தவிர பிரபல தொகுப்பாளரான ஆர்ஜே விஜய்யும் டான் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால் டான் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…