குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த வாரமும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8 ஆவது பிரமாண்டமான துவக்கவிழா இருப்பதால் ஒளிபரப்பபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் கூடிய சில நிகழ்ச்சிகள் மக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிடுகிறது. தொடர்ச்சியாக சில நிகழ்ச்சியை பார்த்து கூடியவர்கள் எண்ணிக்கையும் அதிகம். முக்கியமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப படும்பொழுது எந்த நிகழ்ச்சிகளும் அதிகமாக எடுபடாது. ஆனால் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கடந்து குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி தான் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பைனல் தொடர் ஒளிபரப்பு காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பபடவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடுகிறதே என அதை பார்த்தவர்களை விட குக் வித் கோமாளி போடவில்லையே என வருத்தப்பட்டவர்கள் தான் அதிகம் என்று கூறியே ஆக வேண்டும்.
அது போல இந்த வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்காதாம். காரணம் என்னவென்றால் சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட துவக்கவிழா இருப்பதால் அந்த நிகழ்ச்சி தான் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியிலிருந்து இரவு 8 மணி வரை ஒன்பது மணி நேரம் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட இருக்கிறதாம். எனவே இந்த வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். போன வாரம் ஒளிபரப்பப்படாததற்கு மிகுந்த சோகத்தில் இருந்த ரசிகர்கள் இந்த வாரமும் ஒளிபரப்பபடவில்லை என்று தெரிந்தால் வருத்தத்திலே உடைந்து போய் விடுவார்கள் போல, இருந்தாலும் அடுத்த வாரம் எதிர்பார்க்கலாம். வேறு எந்த நிகழ்ச்சியும் உங்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தடையாக வராது என்று நம்புவோம்.
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…