நடிகர் சிம்புவுடன் புகழ் மாநாடு படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படம் வைரல் வருகிறது.
நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநாடு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்திற்கான கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி வரும் புகழ் நடிப்பது உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆம் புகழ் நடிகர் சிம்புவுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏற்கனவே தளபதி 65, வலிமை, விஜய் சேதுபதியின் 46 வது படம், சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்திலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி வரும் புகழ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பெங்களூரு : துபாயில் இருந்து 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவு கடந்த…
சென்னை : தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர்…
துபாய் : 37 வயதான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு குறித்த தகவல் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஓடி…
சென்னை : சென்னை ராயப்பேட்டை YMCA அரங்கில் தவெக சார்பில் இன்று மாலை நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில்…
திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர்…