மாநாடு படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி புகழ்..!! வெளியான வைரல் புகைப்படம்..!!

நடிகர் சிம்புவுடன் புகழ் மாநாடு படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படம் வைரல் வருகிறது.
நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநாடு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்திற்கான கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி வரும் புகழ் நடிப்பது உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆம் புகழ் நடிகர் சிம்புவுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏற்கனவே தளபதி 65, வலிமை, விஜய் சேதுபதியின் 46 வது படம், சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்திலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி வரும் புகழ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025