மாட்டுக்கறி தொடர்பான சர்ச்சை கருத்து பதிவு விவகாரம்! இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்!
நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் யூனுஸ். இவர் இணையதளத்தில், மாட்டுக்கறி தொடர்பான சர்ச்சை கருத்தினை பதிவிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து இந்து மக்கள் கட்சியினர் அளித்த புகாரை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நாகை மாவட்டத்தின் இந்து மக்கள் கட்சி செயலாளர் பார்த்திபன் நேற்று மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.