கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.! அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்.!

Default Image
  • கிரேட்டா கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் என டிவிட் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
  • உலகம் முழுவதும் கவனம் ஈர்த்த கிரேட்டாவுக்கு டைம் பத்திரிகை கவுரவம் அளித்துள்ளது.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பர்க் என்பருக்கு 16 வயது இளம்பெண் ஆவார். இவர் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வந்தார். பின்பு இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டம் நடத்தினார். இதன் மூலம் அவர் உலக நாடுகளில் மிகவும் பிரபலமானார்.

ஐ.நா.வில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்று பேசிய இவர் உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாய்வு வெளியேற்றத்தை எதிர்கொள்வதில் இளம் தலைமுறையினரை உலகத்தலைவர்கள் ஏமாற்றி விட்டதாக குற்றம்சாட்டினார். உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த கிராட்டாவுக்கு மிக பிரபலம் வாய்ந்த டைம் பத்திரிக்கை கௌரவம் செய்துள்ளது. மேலும், 2019-ம் ஆண்டின் சிறந்த நபராக கிரேட்டாவை டைம் பத்திரிக்கை தேர்வு செய்துள்ளது. கிரேட்டா என்பவர் ஒரு சாதாரண சிறுமி உண்மையை உரக்கச் சொல்லிய அவர் இந்த ஆண்டின் சிறந்த நபர் என டைம் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கிரேட்டா கோபத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும், நண்பர்களுடன் சேர்ந்து பழமையான திரைப்படங்கள் பார்க்க வேண்டும், என அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு கிரேட்டா பதிலளிக்கும் விதமாக தன் டிவிட்டர் பாயோவை மாற்றி கிரேட்டா கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கும் சிறுமி எனவும் நண்பர்களுடன் சேர்ந்து பழமையான திரைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என கூலாக பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்