உலககோப்பை போட்டியை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் தொடர் மழை !

உலககோப்பை தொடர் கடந்த மாதம் 30 -ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது.இந்த தொடரில் பத்து அணிகள் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில் இதுவரை 16 போட்டிகள் நடந்து முடிந்து உள்ளது.அதில் மூன்று போட்டிகள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
கடந்த 7-ம் தேதி பாகிஸ்தான் -இலங்கை இந்த இரு அணிகளும் பிரிஸ்டல் மைதானத்தில் மோத இருந்த நிலையில் ஒரு பந்து கூட வீசாமல் போட்டி ரத்தானது. நேற்று முன்தினம் தென் ஆப்ரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டி தொடங்கி 8 ஓவர்கள் நடைபெற்ற நிலையில் மழை காரணமாக போட்டி ரத்தானது.
இந்நிலையில் நேற்று பிரிஸ்டலில் உள்ள கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் வங்காளம் vs இலங்கை அணிகளுக்கு போட்டி நடக்க இருந்தது.அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
போட்டி ரத்தான அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டு உள்ளது.இன்று போட்டி நடைபெற உள்ள நிலையில் இங்கிலாந்தில் மழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இங்கிலாந்தில் உள்ள தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு அடுத்த சில தினங்களுக்கு இடி உடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் கூறி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?
April 30, 2025
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025