#breaking: ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான்!!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றி வளைத்ததை அடுத்து, தற்போது ஆட்சியை கைப்பற்றியது தலிபான் அமைப்பு.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து படிப்படியாக வெளியேறியது.

இதனை பயன்படுத்தி கடந்த சில மாதங்களாக தலிபான்கள், ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான தாகர் உட்பட பல மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ளனர். கடந்த மாதம் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், ராணுவ படைகளுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி ஏராளமான குழந்தைகள் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தலிபான்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அந்நாட்டு ராணுவம் பின்வாங்கி வந்தது. ஆப்கானிஸ்தானில் கந்தஹார், ஜலாலாபாத், மசார் இ ஷெரீப், குந்துஸ் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நகரங்களை கைப்பற்றிய தலிபான்கள், இன்று காலை தலைநகர் காபூல் நகருக்குள் நுழைந்தனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் தலிபான் பயங்கரவாதிகள் நுழைந்து உள்ளதால் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.

அமைதியான முறையில் அதிகாரத்தை விட்டு தர தலிபான்களுடன், அந்நாட்டு அரசு பேசுச்சுவார்தை நடத்த உள்ளதாக தகவல் கூறப்பட்டது. தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சி பொறுப்புகளை ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றி வளைத்ததால் அதிபர் பதிவில் இருந்து அஷ்ரப் கனி விலக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை,  தலிபான் அமைப்பினர் கைப்பற்றும் சூழல் நிலவுவதால் அமெரிக்கர்களை அந்நாட்டு ராணுவம் மீட்டு வருவதாக கூறப்பட்டது. அதன்படி, காபூல் தூதரகத்திலிருந்து அமெரிக்க அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தையம் தலிபான் அமைப்பினர் தற்போது கைப்பற்றியுள்ளனர். தலிபான் அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து, முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

10 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

18 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago