இலங்கையில் தொடரும் பதற்றம்! மீண்டும் ஊரடங்கு உத்தரவு!
இலங்கையின் தலைநகரான கொழும்பில் நேற்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் வெடி குண்டுகள் வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 290 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் நேற்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் அந்த உத்தரவு தளர்த்தப்பட்டது. இதனையடுத்து, மீண்டும் இலங்கையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.