தொடரும் இஸ்ரேல், ஹமாஸ் மோதல் – 109 ஹமாஸ் படையினர் மற்றும் 7 இஸ்ரயேலர்கள் பலி!
இஸ்ரேலர்களுக்கு காசா முனையில் உள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 109 ஹாமஸ் படையினரும் 7 இஸ்ரேலர்களும் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், காசா முனையை ஆட்சி செய்து வரக்கூடிய ஹமாஸ் போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதி வருகிறது. இந்த ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலர்களுக்கும் இடையே அடிக்கடி வான்வழி தாக்குதல் மூலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை அல்- அக்ஷா மத வழிபாட்டுத் தலத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
இதனையடுத்து இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது காசா முனையிலிருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலியர்கள் பதிலடி தாக்குதல் நடத்தினர். இவ்வாறு இருவரும் மோதிக் கொண்டதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்ததுடன், பலர் உயிரிழக்கவும் செய்தனர். இவ்வாறு இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த இரு தரப்பு மோதலில் இதுவரை மொத்தம் 116 பேர் உயிரிழந்துள்ளனராம். காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த 106 பேரும், இஸ்ரேலில் உள்ள ஏழு பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.