தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா.! நேற்று 132 பேர் … இன்று 170 ஆக உயர்ந்த பலியானோரின் எண்ணிக்கை .!
- கொரோனா வைரஸ் சீனாவில் பல மாகாணங்களில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
- சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று காலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனாவைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த கொரோனா வைரஸ் சீனாவில் பல மாகாணங்களில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று வரை 132 இறந்த நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 38 அதிகரித்து இன்று காலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.மேலும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலில் 7,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த வைரஸ் நோய்க்கு சீனா அரசு இதுவரை எந்த வித மருந்தோ அல்லது தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் நாள்தோறும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக அரசும் , மருத்துவர்களும் பெரும் அதிர்ச்சியில் உள்ளது.
இதற்கிடையே சீனாவில் வசித்து வரும் தங்கள் நாட்டினரை மீட்கும் பணியில் பல நாடுகள் தொடங்கி உள்ளது. அதில் சீனா வுஹான் மாகாணத்தில் இருந்து 200 அமெரிக்கர்கள் ஒரு விமானம் மூலமாக கடந்த செவ்வாய் கிழமை இரவோடு இரவாக தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.