இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்து காங்கிரஸ் தீர்மானம்!

Published by
கெளதம்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தொடர்ந்து 4வது நாளாக நடந்து வரும் போருக்கு மத்தியில், நேற்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸின் செயற்குழு கூட்டத்தில், இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பாலஸ்தீனத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

காசா பகுதியில் நுழைந்துள்ள ஹமாஸ் குழு, இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலில் குறைந்தது 700 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காசா பகுதியில் இஸ்ரேலின் எதிர்த்தாக்குதலில் கிட்டத்தட்ட 500 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரில் மூன்று நாட்கள் கடந்த நிலையில், இந்த போரில் இரு தரப்பிலிருந்தும்  உயிரிழப்பு எண்ணிக்கை 1,600 தாண்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசைக்கப்பட்ட நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

காங்கிரஸ் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், இஸ்ரேல் – பாலஸ்தீனத்தில் வெடித்துள்ள போரின் விளைவாக, 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தி, பேச்சுவார்த்தையின் மூலம் நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

தங்களது நிலத்தை பாதுகாப்பது, சுயாட்சி செய்வது, கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்வது உள்ளிட்டவை பாலஸ்தீனர்களின் உரிமை என்ற எங்களது நீண்டகால ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

1 hour ago

நீட் தேர்வில் மோசடி…தி.மு.க மன்னிப்புக் கேட்க வேண்டும்! த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்!

சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…

2 hours ago

ராஜஸ்தான் பந்துகளை ராக்கெட் விட்ட சாய் சுதர்சன்! குஜராத் வைத்த பெரிய இலக்கு?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…

3 hours ago

விரைவில் மருந்துகளுக்கு பெரிதளவில் இறக்குமதி வரி! அதிபர் ட்ரம்ப் அலர்ட்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…

3 hours ago

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

6 hours ago

உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…

7 hours ago