வாழ்த்துக்கள் மாம்ஸ்.! சூர்யா படத்திற்கு வாழ்த்து தெரிவித்த தளபதி நண்பர்.!
நடிகர் சூர்யா நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். மிக சிறந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.
இரண்டு அரை வருடங்கள் கழித்து சூர்யாவின் படம் திரையரங்குகளில் வெளியாவதால் படத்தை கொண்டாடி வருகிறார்கள். ரசிகர்கள் மற்றும் நடிகர்கள், நடிகைகள் திரைப்படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகரும் தளபதி விஜயின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் ட்வீட்டரில், “வாழ்த்துக்கள் சூர்யா மாம்ஸ்…பாண்டிராஜ் ராஜ் சார், பிரியங்கா மோகன், சூரி படக்குழு. எதற்கும் துணிந்தவன் படத்தை குடும்பத்துடன் பாருங்கள்.” என பதிவிட்டுள்ளார்.
Wishing @Suriya_offl Mams, @pandiraj_dir sir, @priyankaamohan, @sooriofficial & team #EtharkkumThunindhavan for a great success. Watch it in theatres with family ????????❤️????
— Sanjeev (@SanjeeveVenkat) March 10, 2022
இந்த திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் வினை, சத்யராஜ், சரண்யா, புகழ், போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.