இரண்டு பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்! கிரிக்கெட் உலகில் பரபரப்பு!
நியூசிலாந்து நாட்டில் இரண்டு பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொள்ள கொண்டுள்ளனர். மேலும் இவர்கள் திருமணம் செய்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
நியூசிலாந்து நாட்டில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஒரே பாலினத்தவர் திருமணச் சட்டம் நடைமுறையில் உள்ளது .இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை நிக்கோலா ஹான்காக் மற்றும் நியூசிலாந்தின் ஹேலி ஜேன்சென் ஆகிய இருவரும் இன்று நியூசிலாந்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்
இருவரும் ஆஸ்திரேலியா பிக் பாஸ் பெண்களுக்கான டி20 லீக் தொடரில் மெல்போர்ன் அணிக்காக ஆடி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் மெல்போர்ன் அணி இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.