கர்ணன் அணிக்கு தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள் – கைதி பட பிரபலம் ட்வீட்.!
கர்ணன் அணிக்கு தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள் என்று நடிகர் ஜார்ஜ் மரியன் ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலே ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டும் பார்க்காமல் பல சினிமா பிரபலங்களும் பார்த்த விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகின்றார்கள். அந்த வகையில் கலகலப்பு, கைதி , பிகில் போன்ற திரைப்படங்களில் நடித்த ஜார்ஜ் மரியன் கர்ணன் படத்தை பார்த்துவிட்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் “கர்ணன் அவ்வளவு நல்ல படைப்பு. அணிக்கு தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.
இந்த கர்ணன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகி பாபு, நட்டி நடராஜன், கௌரி கிஷன், லால் போன்றார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
#Karnan அவ்வளவு நல்ல படைப்பு. அணிக்கு தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள்@dhanushkraja @mari_selvaraj
— Actor GeorgeMaryan (@GeorgeMaryanOff) April 9, 2021