நடிகை தேவயானி செய்த செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் 1990-களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் தேவயானி. இவரது நடிப்பில் வெளியான காதல் கோட்டை, நீ வருவாய் என, சூரிய வம்சம், கிரி, ஆகிய திரைப்படங்கள் மறக்கமுடியாத ஒன்றாக தான் இருக்கிறது.
கடந்த 2001-ஆம் ஆண்டு இவர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ராஜகுமாரனின் சொந்த ஊருக்கு அருகேயுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் அவரும் அவரது மனைவி தேவையானியும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள்.
இவர்களது தோட்டத்துக்கு அருகே ஒருவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்காக பிளாட்டுகளாக மாற்றியுள்ளார். இதனை அறிந்த, தேவயானி அவரிடம் பேசி அந்த 2 ஏக்கர் நிலத்தை பணம் கொடுத்து வாங்கி, பின்அதை விவசாய நிலமாக மாற்றி, தற்போது 2 ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளார்.
அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இயற்கை விவசாயியாக மாறியதுடன் மட்டுமில்லாமல், தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றியதற்காக தேவயானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…