தாத்தாவாக பதவி உயர்வு பெறும் சியான்.!குவியும் வாழ்த்துக்கள்.!
விக்ரம் அவர்களின் மகள் அக்ஷரா கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் படத்திலும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகனுடன் இணைந்து ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். இவருக்கு துருவ் விக்ரம், அக்ஷிதா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது அனைவரும் அறிந்ததே. அவரது மகள் அக்ஷிதாவிற்கு கடந்த 2017ம் ஆண்டு மனுரஞ்சித் என்பவருடன் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைப்பெற்றிருந்தது.
இந்த நிலையில் தற்போது விக்ரமின் மகள் கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த விக்ரம் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்களாம். இப்போது இளம் ஹீரோயின்களுடம் டூயட் செய்யும் விக்ரம் தாத்தாவாக பதவி உயர்வு பெற்ற செய்தியை அறிந்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.