ரம்ஜான் தினத்தன்று கலவரத்தில் ஈடுபட்ட 29 பேருக்கு மரண தண்டனை விதித்த காங்கோ அரசு!

Default Image

ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் ரம்ஜான் தினத்தன்று கலவரத்தில் ஈடுபட்டு 29 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையடுத்து தலைநகரான கின்சாஷாவில் உள்ள மிகப் பெரிய மைதானத்தில் இந்த ரம்ஜான் பண்டிகையைக்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்துவது யார் என்பது தொடர்பாக இரு முஸ்லிம் பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி, பெரும் கலவரமாக வெடித்துள்ளது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கலவரத்தை தடுத்து இரு பிரிவினரையும் சமாதானம் செய்து வைக்க முயற்சித்தாலும், இருதரப்பினரும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதுடன் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.இதில் ஒரு போலீஸ் அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளார். மேலும் பல போலீசார் படுகாயமடைந்த நிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இந்த கலவரம் தொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் வழக்கு விசாரணை நடைபெற்று உள்ளது.

இதனை அடுத்து இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில் குற்றம் சாட்டப்பட்ட 31 பேரில் 29 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த காங்கோ நாட்டில் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் மரண தண்டனை விதிக்க கூடாது என்று தடை இருப்பதால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 29 குற்றவாளிகளும் ஆயுள் தண்டனை அனுபவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்