பிக்பாஸில் இந்த வார தலைவர் பதவியில் ஏற்பட்ட குழப்பம் .!கேப்டன் பாலாஜியா?ரம்யாவா?
தலைவர் போட்டிக்கு போட்டியிட்டவரில் பாலாஜி தலைவராக தேர்வாக அவரோ ரம்யா தான் வெற்றியாளர் என்று கூறுகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் இந்த வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டதாக நிஷாவையும் , புதிய மனிதா டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டதற்காக பாலாஜி மற்றும் ரம்யா ஆகியோர் தேர்வாகி தலைவர் போட்டிக்கு போட்டியிட இருந்தனர் .
தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில் மூவரும் தலைவர் போட்டிக்கு போட்டியிடுகின்றனர் .அதில் முதலில் தனக்கு கொடுத்த டாஸ்கை பாலாஜி முடித்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த பின்னர் பாலாஜி பேசிய போது தான் டாஸ்க்கில் தவறு செய்ததாகவும் ,அதை நான் கடைசியாக பார்த்ததாகவும் ,எனவே சரியாக டாஸ்க்கை முடித்த ரம்யா தான் வெற்றியாளர் என்று கூறுகிறார்.எனவே இந்த வார தலைவர் பாலாஜியா அல்லது ரம்யாவா எனும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதில் யார் தலைவர் என்பது நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும்.
#Day68 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Jh0edf7wzg
— Vijay Television (@vijaytelevision) December 11, 2020