தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள க்யாகுல் நகரில் உள்ள மிகப் பெரிய சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 58 பேர் உயிரிழப்பு.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள க்யாகுல் நகரில் மிகப் பெரிய சிறைச்சாலை ஒன்று உள்ளது. குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் நகரங்களில் ஒன்றாக க்யாகுல் கருதப்படுகிறது. போதைப் பொருட்களை கடத்தி விநியோகம் செய்யும் 2 குழுக்கள் சிறைக்குள் சரமாரியாக மோதிக் கொண்டனர்.
சனிக்கிழமை காலையில் தொடங்கிய இந்த பயங்கர சண்டையில், இரு குழுக்களும், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கத்தி போன்றவற்றை பயன்படுத்தி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் 58 கைதிகள் கொல்லப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காவல்துறையினர் தலையிட்டு இந்த மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த செப்டம்பரில் நடந்த இதேபோன்ற சம்பவத்தில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நடப்பாண்டில் மட்டும் 300-க்கும் அதிகமானோர் சிறை கலவரத்தில் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…