மாநாடு படம் உலக தரத்தில் இருக்கும் – அஞ்சனா கீர்த்தி.!

மாநாடு படம் உலக தரத்தில் இருக்கும் என்று நடிகை அஞ்சனா கீர்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சனா கீர்த்தி, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல், டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. விரைவில் இரண்டாவது பாடல் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த அஞ்சனா கீர்த்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மாநாடு படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். இதில் அவர் பேசியது ” மாநாடு படப்பிடிப்பில் வெங்கட் பிரபு, சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் அனைவரும் சந்தோசமாக இருப்பார்கள். எங்கள் செட் மிகவும் உற்சாகத்துடன் இருக்கும். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் எனக்கு இது இரண்டாவது படம். மாநாடு படம் உலக தரத்தில் இருக்கும் . ஒரு சாதாரண தமிழ் படமாக இருக்காது. கண்டிப்பாக அனைவர்க்கும் இந்த திரைப்படம் பிடிக்கும். எனக்கு இந்த மாதிரி ஒரு கதையில் நடித்தது கிடைத்த அதிஷ்டம்” என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025