தமிழக முதல்வரை பாராட்டி அறிக்கை வெளியிட்ட மாநாடு பட தயாரிப்பாளர் !

Published by
லீனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்திலும்  தற்போது  இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து, மாநாடு பட  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதல்வரை பாராட்டி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக செயல்பாடுகள், இரவு பகலாகத் திட்டமிட்ட முன்னேற்பாடுகள் பல தூக்கமில்லாத இரவுகளைச் சுமந்திருப்பார் முதல்வர். சரியாக இல்லாதபோது திட்டுகிற நாம், சரியாகச் செயல்படும்போது அந்த சிஸ்டத்தை பாராட்டியே ஆக வேண்டும். தமிழகத்தை முழு அடைப்பால் முடக்கினாலும், மக்கள் பசியால் பட்டினியால் வாடிவிடாமல் திட்டமிட்ட விதிமுறைகள், காவலர்களிடம் நடந்துகொண்ட அணுகுமுறை அத்தனையும் இந்த இடர்ப்பாடான நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார் நம் முதல்வர்.

உடன் பம்பரமாய் சுழலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் முதல்வருக்கு மிகுந்த பக்க பலமாக செயல்படுகிறார். இன்னும் வேகமாகப் பரவும் இந்த கரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் உணர்ந்து செயல்படுவதே ஆட்சியாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பலன் தரும். சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படாமல் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் விரைவில் மீண்டுவிடலாம்.

இப்போதைய நிலையில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கப் பணம் படைத்தவர்கள் முன் வந்து உதவலாம். கரோனா வந்து உயிர் போனால் பணத்தை வைத்து என்ன பண்ண? எத்தனை கோடிகள் வைத்திருந்தாலும் எவ்வளவு புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் கரோனா வந்துவிட்டால் குணப்படுத்த மருந்து இல்லை அய்யா.

இன்று இத்தாலியில் அத்தனை பேரும் பணத்தைத் தெருவில் கொண்டுவந்து கொட்டிவிட்டு இந்தப் பணம் எங்களைக் காப்பாற்ற அல்ல. இதை எடுத்துக்கிட்டு உயிரைக் காப்பாத்துங்கன்னு கதறி இருக்காங்க. அதனால் அரசு இன்னும் பாதுகாப்பு உபகரணங்களைத் தயார் செய்யப் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கப் பணம் படைத்த அனைவரும் நிதி கொடுக்க முன்வரலாம்.

கட்சிப் பாகுபாடின்றி எல்லோரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துங்கள். நம் நாம் தமிழர் தம்பிகளும் இதைச் செய்யுங்கள். அண்ணன் சீமானின் தம்பிகளில் நானும் ஒருவன். நாம் தமிழர் கட்சியில் தீவிர செயல்பாட்டில் உள்ளவன்.

ஆனாலும், இக்கட்டான நேரங்களில் கைகோத்து மனிதர்களாய் நின்று பேரழிவினை ஏற்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத இந்த கரோனா கிருமியை ஒழித்துக் கட்ட தீவிரமாகச் செயலாற்றும் முதல்வரைப் பாராட்டி உடன் நிற்கிறேன். இந்த சமயத்திலும் தொலைக்காட்சி விவாதங்களில் உட்கார்ந்து கொண்டு விவாதங்களை மட்டுமே செய்துகொண்டிருப்பவர்கள் முன்னிற்கும் ஆபத்தான நாட்களை உணர்ந்து செயல்படுங்கள்.

அதற்குப் பதிலாக அரசு சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு சேருங்கள். வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். வாட்ஸ் அப்பில் உங்களுக்குத் தெரியாத செய்திகளை அனுப்பி, பயத்திலிருப்பவர்களை மேலும் பதற்றப்படுத்தாமல் இருங்கள். இந்த செய்திகளைப் படிப்பதைவிட கரோனா வந்தே செத்திடலாம் போல இருக்கு. தயவுசெய்து அறிவுப்பூர்வமான தேவையான செய்திகளை மட்டுமே பகிருங்கள்.

தன்னுயிர் மதிக்காது இந்நேரம், நேரம் காலம் பாராது சேவை செய்யும் ஒவ்வொரு மருத்துவரையும், செவிலியரையும், காவலரையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இன்று நாட்டைக் காக்க (மருத்துவம், காவல்) போர்புரியும் போர்வீரர்கள் இவர்கள். இவர்களுக்கு எந்த பாதிப்பும் நேரா வண்ணம் இறையோன் காக்க வேண்டிக் கொள்கிறேன். முதல்வரோடு நின்று இக்கரோனாவை வெல்வோம். மீண்டும் பழைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்குச் சீக்கிரம் திரும்புவோம் என்ற நம்பிக்கையோடு வீட்டிலிருப்போம். பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருப்போம்” என அந்த  அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

SA vs IND : இரண்டு சதம் …தொடரை கைப்பற்றிய இந்திய அணி! சஞ்சு, திலக் அதிரடியில் துவம்சமான தென்னாப்பிரிக்கா!

SA vs IND : இரண்டு சதம் …தொடரை கைப்பற்றிய இந்திய அணி! சஞ்சு, திலக் அதிரடியில் துவம்சமான தென்னாப்பிரிக்கா!

ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…

7 hours ago

“கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டேன்”…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…

7 hours ago

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

9 hours ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

10 hours ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

10 hours ago