பொருளாதார தடை அச்சம்:170% அதிகரித்த காண்டம் விற்பனை!
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 21 நாட்களாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளது.அதே சமயம்,உக்ரைன் தலைநகர் கீவ்,மரியபோல் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள்,கட்டடங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.
பொருளாதார தடை:
இதனிடையே,உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா,கனடா உள்ளிட்ட சில நாடுகள் மற்றும் பிரபல நிறுவனங்கள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
இதனால்,முக்கிய மேற்கத்திய கரன்சிகளுக்கு எதிராக ரஷ்ய ரூபிளின் மதிப்பு குறைந்துள்ளதால் ஏற்படும் விலை உயர்வுகளை விற்பனை நிலையங்கள் கடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.குறிப்பாக, விளாடிமிர் புடினின் உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு அவரது பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை சரிந்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
காண்டம் விற்பனை 170% அதிகரிப்பு:
உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள்,பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் ரஷ்யாவில் காண்டம் விற்பனை 170% அதிகரித்துள்ளது.
கடுமையான விலை உயர்வு மற்றும் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு போன்ற அச்சங்களுக்கு மத்தியில் ரஷ்யாவில் காண்டம்களின் தேவை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிராண்டைப் பொறுத்து:
அந்த வகையில்,நாட்டின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான வைல்ட்பெர்ரி கடந்த ஆண்டை விட மார்ச் முதல் இரண்டு வாரங்களில் காண்டம் விற்பனை 170 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதம் அதன் விற்பனையில் 26% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக,ரஷ்யாவின் (Prezervativnaya) கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில்:”நாங்கள் காண்டம் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோதிலும்,மக்களும் அவர்களின் எதிர்கால தேவைக்காக வாங்குகிறார்கள்.பிராண்டைப் பொறுத்து நுகர்வோரின் செலவுகள் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது” என்று அவர் கூறினார்.
600 மில்லியன் இறக்குமதி:
பாரம்பரியமாக, ரஷ்யா ஆண்டுக்கு 600 மில்லியன் காண்டம்களை இறக்குமதி செய்கிறது மற்றும் 100 மில்லியன் உற்பத்தி செய்கிறது. இதனிடையே,ரஷ்யாவின் காண்டம் சந்தையில் 95 சதவீதம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானது என்றும்,Durex, Contex, Hussar மற்றும் பிற பிராண்டுகளை உற்பத்தி செய்யும் ஒரு ஆங்கில நிறுவனமான Reckitt, அதில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது என்றும் வணிக நிபுணர் பாவெல் ஸ்பிச்சகோவ் தெரிவித்துள்ளார்.