விவசாயிகளுக்கு துணை நிற்கும் இசையமைப்பாளர்..!

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஆறு மாதங்களாக வேளாண் சட்டங்களை விலக்க கூறி போராடி வருகின்றனர். கொரோனா காலங்களிலும் இவர்கள் போராடி கொண்டிருப்பதை பார்த்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ட்வீட் ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், வெளியே போக அஞ்சும் இந்த கொரோனா காலத்திலும் சாலைகளிலேயே ஆறு மாத வாழ்க்கையை வாழ்ந்த விவாசாயிகள் என்று விவசாயிகளின் போராட்டத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெரும் வரை போராட்டத்திலிருந்து திரும்பப்போவதில்லை என்று கர்ச்சிக்கும் விவசாயிகளுக்கு துணை நிற்போம் என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.
பரிதாபத்துக்குரிய நம் விவசாயிகளின் போராட்டம் ஆறு மாதங்களைத் தாண்டி. வெளியே போக அஞ்சும் இக்காலத்தில் சாலைகளிலேயே ஆறு மாத வாழ்க்கை. என்ன அவலம்! புதிய சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை திரும்பப்போவதில்லை என்று கர்ச்சிக்கிறார்கள். துணை நிற்போம்! #StandWithFarmers
— James Vasanthan (@Vasanthan_James) May 30, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025