அஜித்தின் வலிமை படம் குறித்து புதிய தகவலை வெளியிட்ட இசையமைப்பாளர்!

- அஜித்தின் வலிமை படம் குறித்து புதிய தகவலை வெளியிட்ட இசையமைப்பாளர்.
- மகிழ்ச்சியில் தல ரசிகர்கள்.
தல அஜித், நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தல அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள், தனியார் விருது விழா ஒன்றில் பேசுகையில், “அஜித் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அதனால் கண்டிப்பாக மியூசிக் செய்றோம். அப்படி வரும்” என்று கூறினார். இவரது இந்த பேச்சு அரங்கத்தில் இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.