மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளரான அனிருத் அவர்களும் வாத்தி கமிங் பாடலுக்கு விஜய்யை போன்று மாஸ்ஸான நடனமாடி டிக்டாக் செய்து அசத்தியுள்ளார்.
தளபதி விஜய் தற்போது நடித்து தமிழ் வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் தான்.
அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, இணையதளங்களிலும் பல்வேறு சாதனைகளையும் பெற்று வருகிறது. அதிலும் வாத்தி கமிங் பாடலுக்கு பல பிரபலங்கள் மாஸ்ஸான நடனமாடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளரான அனிருத் அவர்களும் வாத்தி கமிங் பாடலுக்கு விஜய்யை போன்று மாஸ்ஸான நடனமாடி டிக்டாக் செய்து அசத்தியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…