ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல் இசை வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் காலமானார்!

இந்திய திரையுலகில் இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்து உள்ளவர்தான் எம்.கே. அர்ஜுனன். ஜி.தேவராஜன் தான் அவரது குரு, அவரது குருவின் சாயலில் இருக்கிறார் என பலரும் இவரை பார்த்து கூறுவதுண்டு. ஆனால் யாரையும் இவர் காப்பியடித்தது இல்லை. அது மட்டுமல்லாமல், தற்போது பல கோடிக்கணக்கான ரசிகர்களை ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் தந்தையின் நெருங்கிய நண்பர் எம் கே அர்ஜுனன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் தான் ஏ.ஆர். ரகுமானுக்கு முதன்முதலில் வாய்ப்பு கொடுத்து இசையமைக்க வைத்தாராம். கொச்சியில் உள்ள பல்லுருத்தி பகுதியில் அவரது சொந்த வீடு அமைந்துள்ளது. இங்கு வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை மரணம் அடைந்துள்ளார். திரையுலக பிரபலங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய இந்த செய்தியால் பலரும் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளனர்.