முற்றும் மோதல் ! தென்கொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்த வடகொரிய அதிபரின் சகோதரி
தென்கொரியா-வடகொரியா இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
தென்கொரியா-வடகொரியா இரு நாடுகளுக்கும் இடையே இருந்த பனிப்போர் கடந்த 2018-ஆண்டு தான் முடிவுக்கு வந்தது.அதனை வெளிப்படுத்தும் விதமாக இரு நாட்டு அதிபர்களும் எல்லையை கடந்த நட்பை வெளிப்படுத்தினார்கள்.தொடர்ந்து இரு நாடுகளும் நட்பு பாராட்டி வந்த நிலையில் தற்போது அதில் உரசல் ஏற்பட்டுள்ளது.
தென் கொரியா-வடகொரியா இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் போக்கு உருவாக்கி வருகிறது.வடகொரியாவிற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததால் இந்த மோதல் உருவாகியுள்ளது.இரு தரப்பு இடையே வார்த்தை மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது.இதனிடையே வடகொரிய அதிபர் கிம்மின் தங்கையான கிம் யோ ஜோங் தென் கொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதுவும் தென் கொரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளின் உறவை துண்டிக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் ராணுவத்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.தென் கொரியா தங்களது எச்சரிக்கையை மதிக்கவில்லை என்றும் குற்றம்ச்சாட்டியுள்ளார்.