பிக் பாஸ் வீட்டிற்குள் கண்கலங்கும் போட்டியாளர்கள்… காரணம் இது தான்!
பிக் பாஸ் வீட்டிற்குள் முன்பு நடந்த நிகழ்வுகளை தொகுப்பாக்கி வீடியோ ஒளிபரப்பப்பட்டுள்ளதால், போட்டியாளர்கள் அனைவரும் கண்கலங்குகின்றனர்.
கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் விரைவில் இறுதிக்கட்டத்தை அடையவுள்ள இந்த நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர். சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அண்மையில் வெளியேற்றப்பட்ட ஷிவானி நாராயணன் ஆகிய இருவர் மட்டும் தான் இல்லை.
இந்த போட்டியாளர்கள் அனைவருக்கும் வந்த நாள் முதல் நடைபெற்ற சில முக்கியமான நிகழ்வுகளை வீடியோ தொகுப்பாக ஒளிபரப்பியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்து அணைத்து போட்டியாளர்களும் கண்கலங்குகிறார்கள். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram