SAvsWI:மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம்
இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ் அணி மோதி வருகிறது. இப்போட்டியானது சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க வீரர்களான க்வின்டன் டி காக் ,ஹஷிம் அம்லா இருவரும் களமிறங்கினர்.தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய ஹஷிம் அம்லா 3 -வது ஓவரில் 6 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.பின்னர் களமிறங்கிய ஐடென் மார்கரம் 5 ரன்னில் வெளியேறினர்.
தற்போது களத்தில் டூ பிளெஸ்ஸிஸ் ,க்வின்டன் டி காக் இருவரும் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில் மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.