கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை..!
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு அமைப்பு புதிய கொள்கை அறிவிப்பை வெளியிட்டது. அதில், எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
1952-ம் ஆண்டு அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி மற்றும் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு சட்டம் ஓன்று இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த புதிய கொள்கை அறிவிப்பை வெளியாகி உள்ளது.
புதிய கொள்கை அறிவிப்பு படி, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமின்றி இந்த ஒரு சர்வாதிகார நாட்டை சார்ந்த உறுப்பினர்களும் அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் செல்வதற்கு கிடையாது, நிரந்தரமாக அமெரிக்காவில் குடியேற தான் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இனி அமெரிக்காவிற்கு குடிபெயர விரும்பும் அல்லது அமெரிக்க குடியுரிமையைப் பெற விரும்பும் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கும், சர்வாதிகார நாட்டை சார்ந்த உறுப்பினர்களும் மட்டுமே அமெரிக்க அரசாங்கக் கொள்கை பொருந்தும், ஏற்கனவே உள்ள அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களுக்கு இந்த தடை பொருந்தாது.
வர்த்தகம் முதல் கொரோனா வைரஸ் வரை ஹாங்காங் பாதுகாப்புச் சட்டம் போன்ற பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையில் வளர்ந்து பிரச்சினைகள் தொடர்பாக இந்த முடிவு வந்துள்ளது.