மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தளபதி விஜய் மரக்கன்றுகளை நட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இவர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 படத்தில் நடிக்கவுள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தனது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு கிரீன் இந்தியா சேலன்ஜை செய்ததுடன் விஜய், ஸ்ருதிஹாசன் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கு சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று மரக்கன்றுகளை நட்டுள்ளார். மேலும் மகேஷ் பாபு அவர்களே இது உங்களுக்காக என்றும், இங்கே ஒரு பசுமையான இந்தியா என்றும், அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், நன்றி என்று பதிவிட்டுள்ளார். தற்போது விஜய்யின் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…