தளபதி விஜய் ஒரே போன்காலில் 11பெண்களை காப்பாற்றியுள்ளார்.
சென்னையை சேர்ந்த தேவிகா உட்பட அவரது குடம்பத்தை சேர்ந்த 11பெண்கள் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். அப்போது திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவர்களால் ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனையடுத்து கைகளில் இருந்த காசுகள் அனைத்தையும் செலவாக்கிய இவர்கள் பேருந்து நிலையங்களிலும், கோவில்களிலும் தங்கியிருந்து நாட்களை கழித்து வந்தனர். அதனையடுத்து சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடிய இவர்கள் தூத்துக்குடியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரை சந்தித்து தங்களது மோசமான நிலையை எடுத்து கூறினார்கள்.
அதனையடுத்து உடனடியாக அவர் அகில இந்திய விஜய் ரசிகர் தலைவரான பிஸி ஆனந்த் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக இந்த தகவல் விஜய் அவர்களிடம் சென்றடைய, அவர் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் உள்ள விஜய் ரசிகர் மற்ற நிர்வாகிகளை போனில் தொடர்பு கொண்டு அந்த 11 பெண்களையும் சென்னைக்கு பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனையடுத்து தேவிகா உட்பட அந்த 11 பெண்களையும் அரசின் அனுமதியுடன் சென்னைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரையும் அவரவர் வீட்டில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே போன்காலில் 40 நாட்கள் வரை கஷ்டப்பட்டு வந்த 11பெண்களை விஜய் காப்பாற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…