கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அதில் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு நீலாங்கரை, சாலிகிராமம், பனையூர் உள்ளிட்ட வீடுகளில் சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்று நிறைவடைந்தது. அதை தொடர்ந்து நடிகர் விஜய் நெய்வேலியில் உள்ள படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது படப்பிடிப்பு அங்கு நடத்த கூடாது என்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் விஜயின் ஏராளமானோர் ரசிகர்கள் அங்கு குவிந்ததால் படப்பிடிப்பு முடித்துவிட்டு திரும்பும் போது ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தி சென்றார்.
இதைத்தொடர்ந்து நாளுக்கு நாள் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யை பார்க்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்கு கடல்போல் கூட்டம் குவிந்தது. படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளிய வந்த விஜய், ரசிகர்களை பார்த்து அங்குள்ள வேன் மீது ஏறி அவருடைய செல்போனால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் செல்ஃபி எடுத்து ரசிகர்களிடையே ஆரவாரத்தை கிளப்பினார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…