வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த தளபதி விஜய்.!

Default Image
  • மாஸ்டர் படப்பிடிப்புக்கு தளத்தில் ரசிகர்கள் குவிந்ததால் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளிய வந்த விஜய், ரசிகர்களை பார்த்து அங்குள்ள வேன் மீது ஏறி அவருடைய செல்போனால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் செல்ஃபி எடுத்து ரசிகர்களிடையே ஆரவாரத்தை கிளப்பினார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அதில் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு நீலாங்கரை, சாலிகிராமம், பனையூர் உள்ளிட்ட வீடுகளில் சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்று நிறைவடைந்தது. அதை தொடர்ந்து நடிகர் விஜய் நெய்வேலியில் உள்ள படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது படப்பிடிப்பு அங்கு நடத்த கூடாது என்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம்  செய்தனர். பின்னர் விஜயின் ஏராளமானோர் ரசிகர்கள் அங்கு குவிந்ததால் படப்பிடிப்பு முடித்துவிட்டு திரும்பும் போது ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தி சென்றார்.


இதைத்தொடர்ந்து நாளுக்கு நாள் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யை பார்க்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்கு கடல்போல் கூட்டம் குவிந்தது. படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளிய வந்த விஜய், ரசிகர்களை பார்த்து அங்குள்ள வேன் மீது ஏறி அவருடைய செல்போனால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் செல்ஃபி எடுத்து ரசிகர்களிடையே ஆரவாரத்தை கிளப்பினார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen
narendra modi HAPPY
V. C. Chandhirakumar
Parvesh verma - Arvind Kejriwal