தமிழ் சினிமா ரசிகர்களிடையே இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் ஆவார்.இவரது படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே கிடையாது
நடிகர் விஜய் இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்த திரைப்படம் பிகில். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடிதந்திருந்தனர். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்திருந்தது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கு இசை அமைத்து இருந்தார். ‘பிகில்’ படமானது அக்டோபர் மாதம் 25ம் தேதி தீபாவளி முன்னிட்டு வெளியானது.
பிகில் படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் என முக்கிய தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.
ஆடியோ வெளிட்டு விழா
சென்னை தாம்பரம் தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தளபதி விஜய் பேசுகையில், யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்க வேண்டும். மேலும், பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ, அதை செய்யாமல் லாரி ஓட்டுநர் மீது பழிபோடுகிறார்கள் என்று பேசினார்.
இதற்கு அரசியல் தரப்பில் இருந்து கடும் விமர்சங்கள் எழும்பியது. இந்நிலையில் ஆடியோ வெளியீட்டில் திரைப்படத்தை பற்றி பேசலாம்.ஒருவரை விமர்சித்து விளம்பரம் தேட அவசியமில்லை என்று கருத்துக்கள் எழுந்தன.
பிகில் வசூல் விவரம்
இந்நிலையில் தற்போது இவர் நடித்த பிகில் திரைப்படம் 80 கோடி பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டு இருந்தது. இப்படம், 300 கோடி வரை வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் டாலர் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது.
ரசிகர்களின் ரகளைகள்
பட வெளியீட்டு நாளன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிகில் திரைப்படத்தின் சிறப்பு சிறப்பு காட்சிகள் திரையிடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதில் 50 விஜய் ரசிகர்கள் போலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதில், 28 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த 28 பேரும் தினமும் காலை 9:30 மணிக்கு காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும். மேலும், இவர்கள் 98 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியதால், ரூ.1.50 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும் என கூறப்பட்டது.
பிகில் படத்தின் வெற்றி இரண்டு விவசாயிகளின் கடனை அடைத்தது
பிகில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தளபதி விஜய் ரசிகர்கள் கட்டவுட் பேனருக்கு பதிலாக புதிய முயற்சியாக இரண்டு விவசாயிகளின் கடனை அடைத்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள இரண்டு விவசாயிகள் வாங்கிய சுமார் ஒரு லட்சம் ரூபாய் விவசாய கடனை தேனி மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பாக அடைத்துள்ளனர். இந்தச் செய்தி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பாராட்டை பெற்று வந்தது .
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…