மாளவிகா மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தளபதியை குறித்து கூறுகையில், அவருடன் இந்த படத்தில் பணியாற்றியது மிகவும் அற்புதமாக இருந்தது என்றும், அவர் தான் மிகவும் எளிமையான தன்மையான சூப்பர் ஸ்டார் என்றும், இப்போது நாங்கள் இருவரும் நண்பர்களாக மாறிவிட்டோம் என்றும் கூறியுள்ளார்.
தளபதி விஜய் தற்போது நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, இணையதளங்களிலும் பல்வேறு சாதனைகளையும் பெற்று வருகிறது. அதிலும் வாத்தி கமிங் பாடலுக்கு பல பிரபலங்கள் மாஸ்ஸான நடனமாடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உலகளவில் அந்த பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்து டிரெண்டாகி வருகிறது ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான். சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்பட்டது. விரைவில் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதாநாயகியான மாளவிகா மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தளபதியை குறித்து கூறுகையில், அவருடன் இந்த படத்தில் பணியாற்றியது மிகவும் அற்புதமாக இருந்தது என்றும், அவர் தான் மிகவும் எளிமையான தன்மையான சூப்பர் ஸ்டார் என்றும், இப்போது நாங்கள் இருவரும் நண்பர்களாக மாறிவிட்டோம் என்றும் கூறியுள்ளார்.
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…