மதுரையில் விஜய் ரசிகர்கள் விவேகானந்தரின் விஜயமே வருக , நல்லாட்சி தருக என்ற வசனங்களுடன் காவி உடையில் விஜய் அவர்கள் உள்ளபடி போஸ்ட்ர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தளபதி ரசிகர்கள் விஜய்யின் எப்போதும் வித்தியாசமான முறையில் போஸ்ட்ர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். சமீபத்தில் கூட விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாளை முன்னிட்டு
மதுரை ரசிகர்களின் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்ட்ரில் மக்கள் இயக்கத்தின் புரட்சித் தலைவரே மற்றும் புரட்சி தலைவியே என்று கூறி சங்கீதாவை ஜெயலலிதா போலவும், விஜய் அவர்களை எம். ஜி. ஆர் போலவும் சித்தரித்து ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது மதுரையில் விஜய் அவர்கள் காவி உடை அணிந்து கொண்டு இருப்பது போல எடிட் செய்து அதில் நாடு நலம் பெற 100 இளைஞர்கள் வேண்டும் என்றார் விவேகானந்தர் ;தளபதி, உன்னிடம் இருப்பதோ பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள். விவேகானந்தரின் விஜயமே வருக, நல்லாட்சி தருக என்ற வசனங்களை கொண்ட போஸ்ட்ரை ஒட்டியுள்ளனர். தற்போது அந்த போஸ்ட்ர் அப்பகுதியில் உள்ள அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…