தளபதி 66 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 22 ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ள நிலையில், படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 66 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் விஜயின் 66 வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி படிபல்லி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 22 ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவிக்கப்படுவதாகவும் அத்துடன் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…